Sunday, 29 December 2013

சென்னை வந்து சேர்ந்தார் மகா தமிழ்ப் பிரபாகரன் -ராணுவம் சித்திரவதை செய்ததாக புகார்

கொழும்பு: விசா விதிமுறை மீறல் என்ற காரணத்தைக் கூறி கைது செய்து, விசாரணை நடத்திய சிங்கள ராணுவம் விகடன் குழும நிருபர் மகா தமிழ் பிரபாகரனை நாடு கடத்தியது. இதையடுத்து நேற்று இரவு அவர் சென்னை வந்து சேர்ந்தார்.
வன்னிக்கு சுற்றுலா விசாவில் பயணம் மேற்கொண்ட தமிழ் பிரபாகரனை, விசா விதிமுறை மீறல் காரணம் காட்டி கைது செய்தது இலங்கை அரசு. அவரை தீவிரவாதிகளை விசாரிக்கும் கொழும்பின் நான்காம் மாடி கட்டடத்தில் அடைத்தது.
இந்தக் கைதுக்கு உலகமெங்கும் கிளம்பிய எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து அவரை குடிவரவுத் துறையிடம் நேற்று ஒப்படைத்தது. இந்த நிலையில் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் பிரபாகரனை இன்று சந்தித்தனர். அவர்கள் தமிழ் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு எந்த துன்புறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ் பிரபாகரன் விசா விதிகளை மீறியதாகக் கூறி நாடு கடத்துவதாக இலங்கை அறிவித்து அவரை அங்கிருந்து அனுப்பியது. இதையடுத்து நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தார் பிரபாகரன்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பிரபாகரன் பேசுகையில், என்னை இலங்கை ராணுவத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவு விசாரணை அதிகாரிகள் கை விலங்கு போட்டு விசாரித்தார்கள். விசாரணையின்போது நான் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டேன்.
நான் ராணுவ முகாமை படம் பிடித்ததாக கூறப்பட்டது. ஆனால் நான் அப்படி படம் எதையும் எடுக்கவில்லை. ஒரு விழாவைத்தான் நான் படம் பிடித்தேன். நான் படம் பிடித்தபோது அங்கு ராணுவ அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில்தான் நான் படம் எடுத்தேன் என்றார் பிரபாகரன்.

Saturday, 10 August 2013

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன் “துள்ளு வதோ இளமை’ பட நாயக னாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான ஆண்டு 2002. அதே ஆண் டில், தொலைந்த தன் மகன் கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர் தனுஷ் என புதிய விவகாரத்திற்கு கோடிட்டுள்ளார் சிவகங்கை பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.
“”என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தை கள். மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம் இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.
திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன் சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல் வார்டன் சீதாபதி எங்க ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்… “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.
பையனைத் தேடி அலைஞ்சு திரிஞ்சு சலிச்சுட்டோம். இடையில் ஒரு நாள், தனுஷ் சன்.டி.வி.யில் ஒரு பேட்டி கொடுத்தாப்ல. நான் மதுரைக்காரன் என்றும், மதுரை பக்கத்தில மேலூரை சேர்ந்தவன் என்றும்… “என்னடா.. இவனுக்கு தேனிதானே சொந்த ஊரு, அப்புறம் ஏன் மேலூர் என சொல்றான்?’ என சந்தேகம் வர… அக்கம், பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் காணாமல் போன உன் மகன் கலைதான் தனுஷ் என சொல்ல ஆரம்பிச்சாங்க. அதற்கப்புறம் தான் கலையோட போட்டோ எல்லாம் தேடிப் பிடிச்சு, ஒத்துவைச்சுப் பார்த்தால்… உண்மை எனக்கு தெரிஞ்சது. பிறகுதான் என் கலையை மீட்காமல் விடுவதில்லை எனப் போராடிக் கொண்டிருக்கிறேன்.
ஏன் சார்… என்னையப் பாருங்க. என் முகச்சாயல்தானே அவனுக்கு. இடையில் நான் வேலை பார்க்கிற சிவகங்கை பஸ்-ஸ்டாண்டில் “வேங்கை’ படம் சூட்டிங் நடத்தினாங்க. அப்ப நான் இல்லை. ஆனால், டிரைவர் ஆபிரகாம் நேராக தனுஷ்கிட்ட போய், “உங்க அப்பா கதிரேசன் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு’ என சொல்லியிருக்காரு. “ஏன் கஷ்டப்படணும். என்னை வந்துப் பார்க்கச் சொல்லுங்க…”னு சொல்லிட்டு ஷூட்டிங் போயிட்டான் கலை. நான் இருக்கிற ஊர்ல, வேலை பார்க்கிற சிவகங்கையில என எல்லோருக்கும் தெரியும் என் மகன் கலைதான் தனுஷ் என்று. அதை நிரூபிக்க போராடிக்கிட்டு வருகிறேன். சி.எம். செல்லுக்குக் கூட மனு அனுப்பினேன். விசாரிக்க சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொன்னாங்க. டெய்லி அலைந்தேன். அப்புறம் “பெரிய இடத்து விவகாரம்’ என சொல்லிட்டாங்க.
அதற்குப் பிறகு எங்க ஊரு நடிகர் கஞ்சா கருப்புகிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். அவரும் “இதிலே நான் தலையிடமுடியாது’ எனக்கூறி ஒதுங்கிகிட்டார். என் மகள் கல்யாணத்திற்குப் பத்திரிகை அனுப்பிக் கூட அவன் வரலைங்க. அவன் சம்பாதிப்பதில் சல்லிக் காசு கூட எங்களுக்கு வேண்டாம். என் மகன் தானென்று தனுஷ் சொன்னாப் போதும். அதை நிரூபிப்பதற்கான எந்த டெஸ்ட்டிற்கும் நான் தயாராய் இருக்கேன்” என கண்ணீர் வடித்தார் கதிரேசன்.
தனுஷ் படங்களையும், தன் மகன் கலைச்செல்வனின் படங்களையும் ஒத்து வைத்துப் பார்த்துக் கொண்டே காலம் தள்ளுகிறார் கலையின் தாய் மீனாள். “”உறுதியாய் சொல்றேன்… கலைச் செல்வன்தான் தனுஷ். பெத்தவளுக்குத் தெரியாதா, பிள்ளை யாரென்று..? தனுஷ் யாருக்காகப் பயந்துக்கிட்டு இருக்கான் எனத் தெரியவில்லை? இந்த பிரச்சினை அவனுக்கு நல்லாவே தெரியும்..! வெளியில் வந்து உண்மையை சொன்னால் போதும். மற்றபடி எந்த சொத்து சுகத்துக்கும் நாங்க ஆசைப் படலை” என்றார் தாய் மீனாள்.
இது ஒரு புறமிருக்க முன்னதாக, தனுஷ்-ஐஸ்வர்யா திருமணத்தின் போது, “”எங்களது பிள்ளை தனுஷ். திரும்பத் தாருங்கள்” என மதுரை தவிட்டுசந்தையை சேர்ந்த முருகபாண்டி, பூமி ஆகிய இருவர் கஸ்தூரி ராஜாவை வற் புறுத்த, அவரோ… “5 லட்சம் கேட்டு தன்னை மிரட்டுகிறார்கள்’ என வடபழனி காவல் நிலையத்தில் புகார் செய்ய… இருவரும் காவல்துறையினரால் மிரட்டப் பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூரிலிருந்து கடத்தப்பட்ட கலைச்செல்வன்… குழந்தைத் தொழிலாளியாக கஸ்தூரி ராஜாவிடம் விடப்பட… அவரோ, தன்னுடைய “துள்ளுவதோ இளமை’ படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நபர் வராததால் அந்த படத்தினில் கலைச்செல்வனை தனுஷாக அறிமுகப்படுத்தினார் என்றும், தொடர்ந்து திரையுலகில் தனுஷ் பிரகாசிக்க, அப்பொழுதுதான் குழந்தைத் தொழிலாளியாக விடப்பட்ட கலையைக் கேட்டு கஸ்தூரி ராஜா வை மிரட்டியுள்ளனர் மதுரை வாசிகள் என்றொரு தகவல் கோடம்பாக்கம் ஏரியாவில் இன்றுவரை கிசுகிசுக்கப்படுவதும் உண்டு. திருப்பத்தூரில் கலைச் செல்வன் காணாமல் போன தாகப் பதியப்பட்ட வழக்கு இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது.
தனுஷை சுற்றும் இந்த சர்ச்சைகளுக்கு அவரின் வார்த் தைகள்தான் முற்றுப்புள்ளி

Tuesday, 6 August 2013

இந்தியாவைத் தேடுங்கள் - கூகுள் அழைக்கிறது


கூகுள் இந்தியா நிறுவனம் அண்மையில், ‘Start Searching India’ என்னும் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. சென்ற ஜூலை 30 அன்று, போபால் நகரில் இது தொடங்கி வைக்கப்பட்டது.
கூகுள் தரும் தேடல் சாதனம் மூலம், இணையத்தின் அதிக பட்ச பலனை, இணையம் பயன்படுத்துவோருக்குத் தருவதற்காக, இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“இணையம் என்பது இப்போது படித்தவர்களும், பணி செய்பவர்களுக்கானது மட்டுமல்ல. பலதரப்பட்ட நிலைகளில் வாழ்க்கையை நடத்தி வரும் மக்களின், மாறுபட்ட தேவைகளை நிறைவேற்றி, அனைவரின் வாழ்க்கையைச் சிறப்பாக மேம்படுத்தும் ஒரு சாதனமாக மாறி வருகிறது. எனவே, அதற்கெனச் சிறப்பாகச் செயல்படும் வகையில் கூகுள் தன் தேடல் சாதனத்தினைச் செம்மைப் படுத்தித் தருகிறது” என, கூகுள் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு இயக்குநர் சந்தீப் மேனன் அறிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட தேடல் சாதனம், தேடலுக்கான முடிவுகளைத் தருவதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துள்ளது. தேடலுக்கான சரியான துல்லியமான முடிவுகளைக் காட்டுகிறது. தேடுபவரின் தேவைகளைச் சரியாகப் புரிந்து செயல்படுகிறது. இது தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜிமெயில் ட்யூனிங்

கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல் செயல்பாடுகள், கூடுதல் பயன் தருபவையாகவும், விரைவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமையும். அவற்றை இங்கு காணலாம்.
1. ஜிமெயின் இன்பாக்ஸ்: கூகுள் நிறுவனம் தன் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் ஒரு புதிய வசதியை அளிப்பது வழக்கம். இந்த வசதிகளே, அதன் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து அதன் பக்கம் வைத்துள்ளது. புதிய அறிமுகங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால், அவற்றை எடுத்துவிடவும் அல்லது மற்றவற்றுடன் இணைக்கவும், கூகுள் தயங்காது. கூகுள் தந்துள்ள புதிய வசதி ஒன்று குறித்து இங்கு பார்க்கலாம்.
தற்போது கூகுள் ஜிமெயில் இன்பாக்ஸில் புதிய பிரிவுகளை வடிவமைத்து அளித்துள்ளது. அவை primary, social, promotions, updates and forums ஆகும். இதில் ஏதேனும் உங்களுக்குத் தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், அதனை நீக்கிவிடலாம். இந்த வகை இன்பாக்ஸ் தோற்றத்தை நீங்கள் விரும்பிய வகையிலும் அமைக்கலாம். இதற்கு முதலில், மெயில் தளத்தின் திரையில் வலது மேல் மூலையில் உள்ள, செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தவும். அடுத்து “Configure inbox” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு பாப் அப் ஆகி வரும் பட்டியலில், தேவையற்ற பாக்ஸ்களுக்கான டேப்களுக்கான டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் சேவ் செய்திடவும்.
2. காலண்டரில் நிகழ்வுகள் இணைப்பு: நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையினை மேற்கொள்பவராக இருந்தால், அவற்றை கூகுள் காலண்டரில் இணைப்பது மிக எளிதான ஒன்றாக இப்போது அமைக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்களில் உள்ள தேதி மற்றும் நேரம் தற்போது அடிக்கோடிடப்படுகின்றன. உங்கள் திட்டமிடலை முன் கூட்டியே பார்க்க விரும்பினால், இதில் ஏதாவது ஒன்றின் மேல் கர்சரைக் கொண்டு செல்லவும். நீங்கள் விரும்பினால், தேதி மற்றும் நேரத்தினை மாற்றலாம். பின்னர், “Add to Calendar” என்பதில் கிளிக் செய்து உங்கள் திட்டமிடலில் அதனை இணைக்கலாம். உங்கள் காலண்டரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பதிவில், உங்கள் பழைய மூல அஞ்சலுக்கு ஒரு லிங்க் ஏற்படுத்தப்படும். இதனால், இந்நிகழ்வு சார்ந்த அனைத்தையும் எளிதாகப் பார்வையிட முடியும்.
3. விருப்பமில்லையேல் முடக்கிவிடலாம்: குறிப்பிட்ட மின் அஞ்சல் சார்ந்து பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திடுகையில், அவை தொடர்ந்து நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில், தொடக்க நிலையில் எழுதப்பட்ட கருத்துக்குச் சம்பந்தமில்லாத கருத்துகள் பதிவு செய்யப்படலாம். உங்களுக்கு அதில் விருப்பமில்லாமல் இருக்கலாம். இருப்பினும், அந்த அஞ்சல் சங்கிலித் தொடராக உங்கள் பெட்டியில் வந்து கொண்டே இருக்கும். இதனை உங்கள் மெயில் பாக்ஸில் வராமல் இருக்க, கூகுள் ஒரு வசதியினைத் தந்துள்ளது. “Mute conversations” என்னும் அந்த வசதியினை இயக்கி விட்டால், தொடர் அஞ்சல்கள் வராது.
ஒரு அஞ்சல் தொடரினை முடக்க நினைத்தால், அதன் அருகே உள்ள சிறிய சதுரப் பெட்டியில் கிளிக் செய்து, முதலில் அதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து “More” என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினை விரிக்கவும். இதில் காணப்படும் “Mute” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், இந்த தகவல் சார்ந்த அனைத்து மெயில்களும் நீக்கப்பட்டு, ஆர்க்கிவ் எனப்படும் கிடங்கில் வைக்கப்படும். எனவே “All Mail” என்ற லேபிள் மீது கிளிக் செய்தால், இவற்றை எப்போதும் நீங்கள் காணலாம். இதில் மட்டும் புதியதாக “Muted” என்ற லேபிள் காணப்படும். பின் ஒரு நாளில், இதனைத் தொடர்ந்து நீங்கள் பெற விரும்பினால், மீண்டும் இதனைத் தேர்ந்தெடுத்து, “Move to Inbox” என்பதில் கிளிக் செய்திடவும்.
4. பெரிய பைல்களுக்கு ஜி டிரைவ் பயன்படுத்துக: ஜிமெயில், அஞ்சலுடன் இணைக்கும் பைல்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட அளவிற்கு மேல், அந்த பைல் அல்லது, இணைக்கப்படும் மொத்த பைல்களின் அளவு இருந்தால், எந்த பைல் அளவினை மீறுகிறதோ, அதனை ஏற்றுக் கொள்ளாது. நமக்குக் கட்டாயம் பைலை அனுப்பியாக வேண்டிய சூழ்நிலையில் இருப்போம். இது போன்ற வேளைகளில் கூகுள் ட்ரைவ் பயன்படுத்தி அனுப்பலாம். இதனைப் பயன்படுத்தி, 10 ஜிபி அளவிலான பைலை அனுப்ப முடியும். இது வழக்கமான பைல் அளவினைக் காட்டிலும் 400 மடங்கு அதிகமாகும்.
மிகப் பெரிய பைலை அனுப்பு முன்னர், அதனை ஜி ட்ரைவில் அப்லோட் செய்திட வேண்டும். அதன் பின்னர், ஜிமெயில் தளத்தில், Compose விண்டோவில் Drive ஐகான் மீது கிளிக் செய்திட வேண்டும். பின்னர், நாம் அனுப்ப விரும்பி, கூகுள் ட்ரைவிற்கு ஏற்கனவே அனுப்பிய பைலைக் கிளிக் செய்திட வேண்டும். நீங்கள் அனுப்பிய பைலுக்கு, அதனைப் பெறுபவராக நீங்கள் தேர்ந்தெடுத்தவர் அணுக முடியுமா எனப் பார்க்கும். இல்லையேல் சில செட்டிங்ஸ் மாற்ற கூகுள் உங்களைக் கேட்டுக் கொள்ளும். இவற்றை மாற்றி அமைத்த பின்னர், உங்கள் பைல் அவருக்குச் செல்லும். அவர் அஞ்சலைப் பார்க்கையில், கூகுள் ட்ரைவிலிருந்து, குறிப்பிட்ட பைல் அவர் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகும்.

Saturday, 3 August 2013

அதிரவைக்கும் கூகுள் சாதனம்

அதிரவைக்கும் கூகுள் சாதனம்

மீண்டும் ஒருமுறை உலகையே அதிரவைத்துள்ளது கூகுள் நிறுவனம். அதுமட்டுமல்லாது அப்பிள் நிறுவனத்தின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையமாகவும் இது அமைந்துள்ளது. தற்போது பலரது வீட்டில் உள்ள TV க்களில் இன்ரர் நெட் வசதி இருப்பது இல்லை. எனவே ஒரு இணையத்தில் இருக்கும் புது சினிமாப் படத்தை நாம் பார்க்கவேண்டும் என்றால் லாப்-டொப் பில் அல்லது கணணியில் தான் பார்க்கவேண்டி உள்ளது. அதனை TV ல் பார்க்க நாம் HDMI எனப்படும் கேபிளை, லாப் -டொப்பில் பொருத்தி பின்னர் அதன் மறு முனையை TV ல் பொருத்தினால் தான் புது சினிமாப் படங்களை நாம் TV ல் பார்க்க முடியும். ஆனால் தற்போது இவை அனைத்துக்கும் ஒரு முடிவு கிட்டிவிட்டது. காரணம் கூகுள் தற்போது வெளியிட்டுள்ள சாதனம் தான்.
கூகுள் வெளியிட்டுள்ள இச் சாதனத்தின் விலை வெறும் 35 டாலர்கள் தான்(20 பவுண்டுகள்). இச் சிறிய சாதனத்தை உங்கள் TV யில் உள்ள HDMI இடத்தில் பொருத்தினால் போதும். உங்கள் வீட்டில் உள்ள இன்ரர் நெட் ரூட்டருடன் அது இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். அதனூடாக நீங்கள் உங்கள் TV ஐ ஒரு இன்ரர் நெட் TV ஆக மாற்ற முடியும். உங்கள் மோபைல் போனில் உள்ள வீடியோக்களை TV இல் போடமுடியும். லாப் டோப் , கமரா, ஐபோன் போன்ற சாதனங்களில் உள்ள அனைத்து வீடியோக்களையும் நீங்கள் இச் சாதனமூடாக TV ல் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாது இனி வருங்காலங்களில் உருவாகவுள்ள இனரர் நெட் TVக்களையும் இதனூடாகப் பார்க்க முடியும். குறிப்பாக இன்னும் சில வருடங்களில் சட்டலைட் TV என்பது இல்லாமல் போய்விடும் என்று கூறுகிறார்கள். வியஜ் TV, கலைஞர் TV, ஜெயா TV, போன்ற சட்டலைட் TV க்களின் மவுசு குறைந்து இன்ரர் நெட் ஊடாக ஒளிபரப்பாகிம் TV தான் உலகை ஆட்டிப்படைக்கும் என்கிறார்கள்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை 2014ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், சுமார் 90 சதவீதமான வீடுகளில் அதிவேக இனரர் நெட் வசதிகள் இருக்கும். அதனூடாக அவர்கள் எந்த ஒரு TV ஐயும் பார்க்க முடியும். இதன் ஒரு அங்கமாகவே இது நாள் வரை சட்டலைட் ஊடாக இயங்கிவந்த, ஸ்கை (SKY) தொலைக் காட்சி தற்போது இன்ரர் நெட் ஊடாகவும் தனது ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளது. இவர்கள் வெளியிடும் பாக்ஸ் £9.99 க்கு விற்பனையாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாக்ஸை வாங்கி அதனில் உங்கள் ரூட்டரில் இருந்து வரும் இன்ரர் நெட் கேபிளை இணைத்து, பின்னர் பாக்ஸில் உள்ள HDMI கேபிளை உங்கள் TV ல் இணைத்தால் போதும். ரிமோர்ட் கன்ரோலர் மூலம் பல தொலைக்காட்சிகளை நீங்கள் பார்க்க முடியும்.

Thursday, 28 March 2013

இவன் தமிழனே அல்ல !!!!!!!!!!!!!!!


சிங்களவன் கிரிக்கெட் அணியில் விளையாடி பல கோடி சொத்துகளுக்கு அதிபதியான இவன் தமிழனா ? சென்னையில் உள்ள பல கோடி மதிப்புள்ள மலர் மருத்துவமனை உரிமையாளரின் பெண்ணை திருமணம் செய்து மேலும் பல கோடிகளுக்கு அதிபதியான இவன் ஒரு முறையேனும் தமிழினப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தது உண்டா ?. போர் நடக்கும் போதும் சரி , போர் முடிந்த பின்பும் இவன் தமிழனுக்காக இரக்கப் பட்டது இல்லை.
இவன் இனத்தால் தமிழனாக இருந்தாலும் மனதளவில் சிங்களவனே . இலங்கையில் உள்ள கருணாவைப் போல் , டக்லஸ் போல் இவனும் ஒரு இனத் துரோகியே . இவனை தமிழன் என்று எண்ணி வடநாட்டு ஊடகங்கள் பேட்டி எடுக்கின்றன . அப்பேட்டியின் போது , இவன் சொல்கிறான் , தமிழர்கள் எல்லோரும் போர் முடிந்தவுடன் நலமாக இருக்கிறார்கள் என்று . இவன் தமிழர் பகுதிகளில் சென்று தமிழ் மக்களிடம் பேசி உள்ளானா ? பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்துள்ளானா ? தமிழர்களுக்காக இவன் ஒரு முறையேனும் குரல் கொடுத்துள்ளானா ?
சிங்களக் கொடியை தூக்கிச் சுமக்கும் இவன் தமிழர் கொடியை பிடித்ததுண்டா ? என்றைக்காவது ஒரு நாள் இவன் தன்னை தமிழன் என்று அடையாளப் படுத்தியது உண்டா . சிங்களவனுக்கு வாழ் நாள் முழுவதும் உழைத்து பணம் சம்பாதித்த இவன் தமிழர்களுக்கு எப்படி ஆதரவாக பேசுவான் ? இவனை தமிழன் என்று இவனிடம் கருத்துக்களை கேட்கும் வட நாட்டு ஊடகங்கள் முதலில் இவன் தமிழனே அல்ல என்பதை புரிந்து கொள்ளட்டும். இவனை புறக்கணிக்க வேண்டியது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,

இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்...

Friday, 22 March 2013

பெண்களுடன் கும்மாளமடிக்கும் இவன்தான்...நம் இந்தியா கஷ்டப்பட்டு தேடி கண்டு பிடித்த சர்வதேச இளைஞன்????? ராஜபக்சேவின் மகனான நமல் ராஜபக்சேவுக்கு சிறந்த சர்வதேச இளைஞன் விருது டெல்லியில் நடக்கும் ஒரு பத்திரிக்கை விழாவில் காங்கிரஸ் அரசால் வழங்கப்படுகிறது. இலங்கை தமிழன் அழிவதற்கு சில வகைகளில் இந்த காங்கிரஸ் தான் காரணமென பலர் தமிழ் இயக்கங்கள் குற்றம் கூறி முழங்கிவரும் நிலையில்... எந்த மத்திய & தமிழ்நாட்டு காங்கிரஸ்காரனாவது முழுமையாக இலங்கை பிரச்சனைய பத்தி பேசியுள்ளனரா??!!! என்றும் பலரும் கேள்வி கேட்கும் இந்நிலையில்., பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளும், கிரிமினல் குற்றச்சாட்டுகளும் அந்நாட்டில் கூறப்பட்டுவரும் ''நமல் ராஜபக்சேவி''ற்கு காங்கிரஸ் அரசு இப்படியொரு விருதை கொடுப்பது என்ன நோக்கத்திற்கு என்பதே விசித்திரமாக உள்ளது.... Edification By --------> கடலூர் கவிஞன் # இதை எல்லாருக்கும் பகிருங்கள்.... தமிழ் நண்பர்களே உலகத்துக்கு உண்மை தெரியட்டும்